ஜெ.வை விட பெரும் பணக்காரர் சசிகலாதானாம்... வங்கி அதிகாரி தகவலால் பரபரப்பு

ஜெயலலிதா வங்கி கணக்கை காட்டிலும் சசிகலாவின் வங்கிக் கணக்கில் அதிக பணம் இருப்பதாக வங்கியின் முன்னாள் அதிகாரி மகாலட்சுமி தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக மக்கள் சந்தேகம் கிளப்பியதை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியது.இந்த விசாரணை கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது நண்பர்கள், அரசு முன்னாள் இன்னாள் அதிகாரிகள் என விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அது போல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுபவர்களிடம் சசி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் இன்று ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இனிப்பு சாப்பிட்டது உண்மைதான் என்றார்.

அதுபோல் அரவக்குறிச்சி , தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் சட்டசபை இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் 3 வகையான இனிப்புகளை அவர் சாப்பிட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஸ்டெல்லா மேரிஸ் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி ஆஜரானார்.

அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியதில், ஆணையத்திடம் தெரிவித்த தகவல்களை தான் குறுக்கு விசாரணையிலும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இளவரசி மகன் விவேக் கல்வி கடன் 2012-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், ஜெயலலிதா வங்கிக் கணக்கில் வெறும் ரூ. 9 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் , சசிகலா கணக்கில் ரூ. 3 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் கடந்த சில வருடங்களாக எந்தவித பரிவர்தனைகளும் மேற்கொள்ளபடவில்லை என்றும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018