பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு

பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. இந்த இடைக்கால கட்டளையையை எவ்வாறு அமுல்படுத்ததுவதென்பது உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்த முதலமைச்சருக்கு தெரியும் என வடமாகாண முன்னாள் அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதனை அமுல்ப்படுத்தாலு விட்டால் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் என்ன செய்ய வேண்டுமென்பதை சட்டம் கூறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை அமர்வு பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது டெனீஸ்வரனின் அமைச்சர் விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதில் உரையாற்றும் போதே டெனீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்ற இடைக்காலக் கட்டளை கடந்த 29 ஆம் திகதி வழங்கப்பட்டதை யாவரும் அறிவீர். இடைக்கால கட்டளை தொடர்பாக முதலமைச்சர் என்பதற்கப்பால் அவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் என்பதால் இந்தக் கட்டளையை எவ்வாறு அமுல்படுத்துவதென்பது அவருக்கு நன்கு தெரியும்.

அதனை அவர் நிச்சயம் அமுல்படுத்துவார். ஆனாலும் அவ்வாறு அமுல்படுத்தவில்லை என்றால் எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமென்ற விடயமும் சபைக்கு வந்து சேரும். அது சம்மந்தப்பட்ட ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கும் செல்லுமென்றார்.

இந்த வழக்குகளுக்கப்பால் உறுப்பினர் சிவாஜிலிங்கம் பல்வேறு விடயங்களைக் கூறியிருக்கின்றார். அதாவது டெனீஸ்வரனிற்கு முன்வரிசையில் ஆசனம் வேண்டுமென்றால் நான் என்னுடைய முன்வரிசை ஆசனத்தை வழங்கத் தயாராக இருக்கின்றேன். எமது கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருக்கின்றார் என்றெல்லாம் கூறியிருக்கின்றார். அதற்குப் பதில் கூற வேண்டிய கடமை இருக்கின்றது.

ஆனால் இந்த ஆசனங்களுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தங்களுடைய கட்சி சார்பாக சில விடயங்களைக் கூறியிருந்தீர்கள்.

அதாவது மூன்று வருடம் கட்சியை நீக்கிவிட்டதாகவும் கூறியிருக்கின்றீர்கள். அவ்வாறு நீங்கள் என்னைக் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு நான் முதலில் கட்சிக்கு வர வேண்டுமென்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கட்சி சார்பானது என்ற விடயங்களை சபைக்கு வெளியில் வையுங்கள். நீதிமன்றத் தீர்ப்பு இது. அதில் அவதானமாக இருக்க வேண்டும். ஆசனத்திற்கு ஆசைப்படவில்லை.

அரசியலமைப்பில் பல விடயங்கள் இருக்கிறது. அதில் என்ன தவறு என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆகவே முதலமைச்சர் அவர்கள் மேன்முறையீட்டுக்குச் செல்வதாக இருந்தால் அதனை வரவேற்கின்றேன்.

அவ்வாறு செல்வதற்கு முதல் நீதியரசராக இருந்த நபர் ஒருவர் இந்த இடைக்கால கட்டளை எவ்வாறு மதிக்க வேண்டுமென்றும் நன்கு அறியக்கூடியவர்.

ஆகவே என்னுடைய இந்த சிறப்புரிமை என்பதற்கப்பால் இந்த விடயத்தில் ஆளுநரோ முதலமைச்சரோ என்ன செய்ய வேண்டுமென்பதை சட்டம் கூறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018