காணாமல் ஆக்கப்பட்டோரின் சரியான தரவு ஐ.நா வில் இல்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் மூலம் இதனை அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்ததும், கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரி தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும் இதுவரை தமக்கு நீதியை பெற்றுக்கொடுக்காது சிறிலங்கா அரசு இழைத்துவரும் அநீதி குறித்து ஐ.நாவில் முறையிடுவதற்காக வடக்கு கிழக்கு காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றிருந்ததுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர் .

இதன்போதே யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் சரியான முறையில் சென்றடையவில்லை என்பதை தாம் அறிந்து கொண்டதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள காணாமல் போனோரது உறவினர்களையும், தமிழ் செயற்பாட்டாளர்களையும் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான உலக சிறிலங்கா பேரவை என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.


இந்நிலையில் மட்டக்களப்பில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் செயற்பாட்டினை தாங்கள் எதிர்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலராணி தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018