யாழ்.கோட்டையில் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்

யாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம். நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டி தேவை இன்று ஏற்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது என்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளாலேயே வடக்குக்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, கோட்டைக்குள் இராணுவம் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து இராணுவமும் பின்னர் விடுதலைப் புலிகளும் இருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைவஸ்த்து கடத்தல் அதிகரித்துள்ளது. இப் போதைவஸ்து நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது.

10 வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றன. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019