இடர்கால மீட்புப் பணியில் கிடைத்த உலக அனுபவம்

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால்சிக்கிக் கொண்டனர்.9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்ததுமிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

இந்த மீட்புப் பணியை சிறுவர்களின் நலம் குறித்த பதற்றத்தோடும், மீட்புப் பணியின் சாகசத் தன்மை குறித்த ஆச்சரியத்தோடு உலகம் உற்று நோக்கி வந்தது. 'காட்டுப் பன்றிகள்' என்று பெயரிடப்பட்ட இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் தொலைந்து போனது முதல், மீட்கப்பட்டது வரையிலான 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் திகிலும் பரபரப்பும் மிகுந்தவை.

செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் மீட்புப் பணியை உற்சாகத்தோடு தொடங்கியது தாய்லாந்தின் கடற்படை சீல் அணி. கடல், வான், நிலப் பரப்புகளில் செயல்படும் உயர் திறன் வாய்ந்த அணிகளையே சீல் அணி என்பர். மூன்றாம் நாள் மீட்புப் பணியை மேற்கொள்ள 19 தாய்லாந்து கடற்படை சீல் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர்.

முதல் இரண்டு நாள்களைப் போல அல்லாமல் செவ்வாய்க்கிழமை மீட்புப்பணி நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கும் மாறாக மிக விரைவிலேயே மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது. கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் வெளியேறிய பிறகே, அவர்களுடன் தங்கியிருந்த மருத்துவர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்குபேர் கடைசியாக குகையை விட்டு வெளியேறினர்.

இயற்கையின் சிக்கலான குகை அமைப்பையும், ஆபத்தான மீட்புப் பணியையும் உலகம் வாய்பிளந்து பார்த்தது. அது மட்டுமல்ல, இடர்0கால மீட்பு என்ற துறை படித்துக் கொள்வதற்கு இந்த சம்பவம் மிக அரிதான பாடங்களை அளித்தது. கண்டுபிடிக்கப்படும் வரை முதல் 9 நாள்கள் குகைக்கடியில் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையும், உற்சாகமும் குறையாமல் காத்திருந்த சிறுவர் அணியின் மன உறுதி குறிப்பாக கவனிக்கப்பட்டது. உறுதியோடு இந்த அணியை காத்திருக்கச் செய்ததில் பயிற்சியாளர் ஏக்போலின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

தேச, இன, நிற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் இருந்து வந்த மீட்புப் பணியாளர்களின் உதவியும், எல்லை கடந்த மானுடத்தின் வாஞ்சையும், எதிர்பார்ப்பும் இந்த நெருக்கடிக்கு ஒரு மனிதாபிமானக் கோணத்தையும் அளித்தன.

இத்தகைய நிலையில் மீட்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களை பிரிட்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனநல மருத்துவரான அன்டிரியா டனெசி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் உளவியல் ரீதியாக அதிர்ச்சிகரமான அனுபவத்தை பெற்றுள்ளனர். அவர்களின் உயிர் வாழ்க்கையை அச்சுறுத்துகின்ற நிலைமையை அவர்கள் அனுபவித்துள்ளனர்.

இதன் விளைவாக, இந்த மீட்புதவி நடவடிக்கை முடிந்த பின்னர், அவர்கள் பாதுகாப்பாக வெளிவந்த பின்னர். சில குழந்தைகளிடம் உணர்ச்சி அறிகுறிகள் தோன்றலாம்.

அழுது கொண்டும், பெற்றோரோடு ஒட்டிகொண்டே இருப்பவராகவும் இந்த சிறார்கள் இருக்கலாம்.

பல நாட்களுக்கு பின்னர், அவர்கள் மன அழுத்தம், கவலை மற்றும் பேரதிர்ச்சிக்கு பிந்திய மன அழுத்தம் போன்ற மன நல பிரச்சினைகளை பெறுகின்ற நிலை ஏற்படலாம்.

பேரதிர்ச்சிக்கு பிந்திய மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் பல குழந்தைகள், இந்த சம்பவம் பற்றி நினைவூட்டுவதை தவிர்க்க செய்வதன் மூலம் இதனை சமாளிக்க பார்ப்பார்கள்.

இந்த சம்பவத்தை அதிக அளவில் நினைவூட்டப்படும் சூழ்நிலைகள் அவர்களை சுற்றி நிலவும் என்பதால், இத்தகைய நிலைமை அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

எல்லா ஊடகங்களும் தங்களையே பார்ப்பதாக இந்த நிலைமை இருக்கும்.

மேலும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவர்கள் அனுபவித்த இந்த சம்பவம் பற்றி விசாரிப்பதாலும் இந்த சம்பவத்தை நினைவூட்டுகின்ற நிலைமை ஏற்படலாம்.

இவ்வாறு இந்த சம்பவத்தை நினைவூட்டுகின்ற சம்பவங்களால், இந்த நிலைமை மிகவும் மோசமாகலாம்.கேள்விகளை தவிர்த்து விடுவதற்காக பிறரிடம் இருந்து சில குழந்தைகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார்கள்.

இரவு வேளைகளில் இருட்டாக இருப்பதை விரும்பால் இருப்பது இன்னொரு பிரச்சினையாக அமையலாம்.

இரவு நேரத்து இருள், அவர்கள் குகையில் சிக்குண்டிருந்ததையும், அதற்கு மேற்கொள்ளப்பட்ட மீட்புதவி நடவடிக்கையையும் நினைவூட்டும் என்பதுதான் இதற்கு காரணமாகும்.

இந்த சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் குறுகிய மற்றும் நீண்ட காலம் மனநல நிபுணர்களின் உதவியை பெறுவது மிகவும் முக்கியமானது.

இருள் அல்லது எதிர்மறையான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படாமல் அவர்களின் அனுபவங்கள் பற்றி பேசப்படுவதை கேட்கிறபோது, இந்த குழந்தைகள் கவலைக்குள்ளாவதை எதிர்கொள்ள உதவுவதற்கு படிப்படியாக தொழில்முறை உதவி வழங்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

குகையில் சிக்கிய இந்த தாய்லாந்து குழந்தைகளை பொறுத்தமட்டில் இந்த சம்பவம் முற்றிலும் எதிர்பார்க்கப்படாதது.

எனவே, பேரதிர்ச்சிக்கு பிந்திய மன அழுத்த அறிகுறிகள் இவர்களுக்கு பின்னர் உருவாகும் சக்தியும் அதிகம் காணப்படுகிறது.எப்படியானாலும், இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது இந்த குழந்தைகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018