முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம்

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.


போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு, கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்களை முப்படையினருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், வழங்கும் வகையில், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான, சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில், இந்த சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளை வரையுமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.

இதுபற்றி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் கஞ்சா, ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள்களின் கடத்தல், பயன்பாடு என்பன அதிகரித்துள்ள நிலையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் தாம் கையெழுத்திடப் போவதாகவும் சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 


Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018