விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்

தன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 

கன்ததெகட்டிய ஸ்ரீதர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 70 வருடங்களாக நாட்டில் உருவான அனைத்து தலைவர்களும் தம்மை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு பொருத்தமான தலைவர் ஒருவர் உருவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என பாரிய சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தான் பெருமை அடைவதாகவும் விஜயகலா தனது இனத்திற்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்த பெண் தனது இனத்திற்காக முன்நிற்கின்றார். அரசியல்வாதிகள் எங்களை பலவீனப்படுத்துவதை மாத்திரமே செய்தனர். பிரிவினை ஏற்படுத்தினார்கள். இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எங்களை பலவீனப்படுத்தினார்கள். எனினும் விஜயகலா மகேஸ்வரன் குறித்து பெருமைப்படுகிறேன்.

தான் சிறை வைக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் பிக்குகள், பௌத்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். என்னை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பௌத்த புத்தரனாக எங்கள் இனம் மற்றும் மதத்தை காப்பாற்ற நாம் முயற்சிக்கின்றோம். எங்களுக்கு சாப்பிடுவதற்கு வாய், வயிறு உள்ளது போன்று, நாடு ஒன்று இருக்க வேண்டும்.

தங்கள் இனத்தை குறித்து நினைத்தே பிரபாகரன் ஆயுதத்தை கையில் எடுத்தார். இந்த நாட்டில் உள்ள தலைவர்களின் செயற்பாடு காரணமாக விஜயகலா போன்ற பெண்கள் எங்கள் தலைவர்களின் தோள்பட்டையிலும் ஏறுவார்கள்.

 தியாகம் செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்காக எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018