நாணய சுழற்சியில் வெற்றியீட்டி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை மற்றும் தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்­வ­தேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.


இதன் படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள டுபிௌஸிஸ் தலை­மை­யி­லான தென்­னா­பி­ரிக்க அணி மூன்று வகை கிரிக்­கெட்­டிலும்

இலங்­கை­யுடன் மோது­கின்றது.

இத் தொடரின் இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகி­ன்றது. அத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

காலி மைதானம் பெரும்­பாலும் சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மாக இருக்கும். மேலும் தென்­னா­பி­ரிக்க துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு நெருக்­கடி கொடுக்க, சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான வகையில் இலங்கை ஆடு­க­ளத்தை தயார் செய்யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதனால் தென்­னா­பி­ரிக்­காவும் சுழற்­பந்­து­வீச்­சுக்கு ஏது­வான களத்தை தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்ள கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷாம்சி, ஷான் வோன் பெர்க் ஆகிய சுழற்­பந்து வீச்­சா­ளர்­களைப் பயன்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

தென்­னா­பி­ரிக்க அணி பொது­வாக இரண்டு சுழற்­பந்து வீச்­சா­ளர்­களை வைத்து விளை­யா­டாது. ஆனால் இலங்கை ஆடு­க­ளத்­துக்கு இன்­னொ ­ருவர் தேவை என்னும் பட்­சத்தில் மற்­றொ­ரு­வரைக் கள­மி­றக்கவும் வாய்ப்­புள்­ளது.

தென்னாப்­பி­ரிக்க அணி எப்­போ­துமே வேகப்­பந்து வீச்­சா­ள­ரான ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகி­யோரை நம்­பியே கள­மி­றங்கும். தற்­போது இந்த வரி­சையில் லுங்கி நிகிடி இடம்­பி­டித்­துள்ளார்.

இத் தக­வலை இலங்­கைக்கு வந்­தி றங்­கி­யதும் டுபிௌஸிஸ் தெரி­வித்தார்.

வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளைத்தான் நாம் நம்­பி­யி­ருக்­கிறோம். தேவை ஏற்­பட்டால் இரு சுழற்­பந்து வீச்­சா­ளர்­களைக் கள­மி­றக்­குவோம் என்றார்.

மறு­மு­னையில் இலங்கை அணியைப் பொறுத்­த­வ­ரையில் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை சம­நி­லையில் முடித்து அடுத்து தென்­னா­பி­ரிக்­கா­வுடன் மோத­வுள்­ளது.


Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018