அவுஸ்திரேலியா முகாமில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 36 பேருக்கு கிடைத்த அதிஷ்டம்

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 36 அகதிகள் அமெரிக்காவிற்கு சென்று அங்கு மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.

அதே சமயம், அமெரிக்கா தடைவிதித்துள்ள நாடுகளான ஈரான், சோமாலியா அல்லது இன்னும் பிற முஸ்லிம் நாடுகளை சேர்ந்த எவரும் இதில் சேர்க்கப்படவில்லை.ஆனால் இந்த நாடுகளை சேர்ந்த அகதிகளே அவுஸ்திரேலியா நிர்வகிக்கும் பப்பு நியூகினியா மற்றும் நவுரு தடுப்பு முகாம்களில் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

அமெரிக்கா தடைசெய்துள்ள நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மீள்குடியமர்த்தும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது, இம்மக்களின் எதிர்காலம் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

இன்றைய நிலையில், 130 குழந்தைகள் உட்பட 900 அகதிகள் நவுரு தடுப்பு முகாமில் உள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் கையெழுத்தான அமெரிக்கா- அவுஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது.

இது ஒரு முறை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018