லிப் ஸ்டிக் விற்று 3 ஆண்டுகளில் உலக பணக்காரர் ஆகலாம் - நிரூபித்து காட்டிய 20 வயது பெண்

அமெரிக்காவில் சுயமாக உயர்ந்து பணக்காரர் ஆன பெண்கள் பட்டியலில் 20 வயதே ஆன அமெரிக்காவை சேர்ந்த கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார். 

அழகு சாதன பொருள் விற்பனை : 

கெய்லி ஜென்னர் அடிப்படையில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனத்தை தனது வளர் இளம் பருவத்தில் தொடங்கினார். அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

2016ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ‘கெய்லி காஸ்மெடிக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கெய்லி, லில்ஸ் ஸ்டிக், லிப் லைனர் (உதட்டுச்சாயம்), கண் அழகு சாதன பொருட்களான ஐ ஷேடோ, ஹைலைட்டர், எலிவேர் மற்றும் பல அழகு சாதன பொருட்களை விற்று வந்தார்.

$ 29 டாலருக்கு விற்றுவந்த அவரின் அழகு சாதன பொருட்கள் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

நவம்பர் 2016ல் விடுமுறை விற்பனை என பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் 19 மில்லியன் டாலர் பொருட்கள் வெறும் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன. 

பிப்ரவரி 2016ல் கெய்லி நிறுவனத்தை தொடங்கிய கெய்லி ஜென்னர் தற்போது $630 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் மிக இளம் வயது தானாக உயர்ந்த அமெரிக்க பெண்கள் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஒட்டுமொத்த பணக்கார பெண்கள் பட்டியலில் 27வது இடத்தைப் பிடித்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார். 

மேலும் ஜென்னர் தனது 100% பங்கை தன் பெயரில் வைத்துள்ளார். 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018