கல்வியை கடைச்சரக்காக மட்டுமல்ல; கடைகோடிச் சரக்காகவே மாற்றிவிட்ட மத்திய பாஜக மோடி அரசு!

இல்லையென்றால் இல்லாத ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரத் தகுதியளிப்பு ஏன்?

’உலகத் தரம்’ என்பது ஊரை ஏமாற்றும் ’கார்ப்பொரேட் மயம்’ என்பதே தவிர வேறன்ன

இது ஆட்சியதிகாரம் நிலைக்கத் தேவையான கல்லாமையையும் இல்லாமையையையும் நிலைநிறுத்தவே எனத் தெளிவுபடுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

 உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் என்றொரு வரிசைப் பட்டியல் உள்ளது. 500 பல்கலைக்கழகங்கள் இடம்பெறும் அந்தப் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் எதுவும் கிடையாது; அதில் இடம்பெற வேண்டும் என்பது மோடி அரசுக்கு மூக்குமுட்டும் ஆசை! காரணம் இந்தப் பட்டியல் கார்ப்பொரேட்டுகளின் ஏற்பாடு என்பதால்தான்!

இதனால் அந்தப் பட்டியலுக்குப் போட்டியிட 3 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் 3 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உலகத் தரத் தகுதி வழங்கியுள்ளது மத்திய அரசு.

அவை: அரசின், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி-டெல்லி), மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி-மும்பை), பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்; தனியாரின், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகியவை.

மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை (அரசுப் பல்கலைக்கழகங்கள் 10, தனியார் பல்கலைக்கழகங்கள் 10) உலகத் தரமாக்க முடிவு செய்ததில், முதற்கட்டமாக இந்த 6ஐத் தேர்வு செய்துள்ளது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு. மீதம் 14 தகுதியான நிறுவனங்கள் இல்லை என்றிருக்கிறது அந்தக் குழு.

தேர்வு செய்த இந்த 6 பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜியோ பல்கலைக்கழகம் இல்லாத ஒன்று; அதைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த கோபாலசுவாமி குழுவுக்கு மீதி 14 நிறுவனங்களுக்கு எதுவும் தென்படாதது வியப்புதான்!

இல்லாத இந்த ஜியோ பல்கலைக்கழகம் ரூ.9,500 கோடி முதலீட்டில் 3 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்கிறது மத்திய அரசு.

உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க உலகத் தரத் தகுதி அவசியம்; அதனாலேயே புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அதை வழங்க முடிவு செய்யப்பட்டது; அப்படி விண்ணப்பித்த 11 நிறுவனங்களிலிருந்தே ரிலையன்ஸின் ஜியோ பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது என்று கொள்கை முழக்கமும் செய்கிறது மத்திய அரசு.

உண்மையில் கார்ப்பொரேட்டுகளின் கொள்ளைதான் இதன் பின்னணியில் இருக்கும் கொள்கை!

இந்த உலகத் தரப் பல்கலைக்கழகங்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள், சலுகைகள் தனித்துவமானவை.

பல்கலைக்கழக மானியக் குழு இவற்றைக் கட்டுப்படுத்தாது; மாணவர் சேர்க்கையில் 30 விழுக்காடு இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி கட்டணக் கொள்ளையே நடத்தலாம். 25 விழுக்காடு வெளிநாட்டுப் பேராசிரியர்களையும் நியமனம் செய்யலாம். பட்டியலில் உள்ள 500 முன்னணி பல்கலைக்கழகங்களுடனும் கூட்டு வைத்துக்கொள்ளலாம். அரசுப் பல்கலைக்கழகங்கள் என்றால் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி உதவி நிதி பெறலாம்.

ஆக, இந்த அதிகாரங்கள், உரிமைகள், சலுகைகள் மூலம் உலக அளவிலான கல்விச் சந்தையில் கோடானுகோடிகளைக் குவிக்கலாம்.

இதனால்தான் தனக்கு ரொம்பவும் வேண்டிய ரிலையன்ஸை அதன் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரத் தகுதி வழங்கியதன் மூலம் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு.

நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி அளிப்பது என்றால்கூட அந்த நிறுவனம் 10 ஆண்டுகளாக கல்விப் பணியில் இருக்க வேண்டும்; ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு சார்ந்த கல்வியில் ஈடுபட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன; ஆனால் இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கே உலகத் தரத் தகுதி வழங்கி கல்வி வரலாற்றில் புதிய சரித்திரமே படைத்திருக்கிறது பாஜக அரசு!

இந்தியாவில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தும் ஒன்றுகூட உலகத் தரத்தில் இல்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் இவர்கள் முனைப்புக் காட்டும் கார்ப்பொரேட் உலகத் தரம் என்பது ஊரை ஏமாற்றும் வேலையே தவிர வேறல்ல!

கல்வியை கடைச்சரக்காக மட்டுமல்ல; கடைகோடிச் சரக்காகவே மாற்றி கொள்ளையடிப்பதுதான் கார்ப்பொரேட் உலகத் தரத்தின் நோக்கம்; அதற்கு வழியமைக்கத்தான் இத்தனையும் செய்கிறது மத்திய பாஜக மோடி அரசு!

இது ஆட்சியதிகாரம் நிலைக்கத் தேவையான கல்லாமையையும் இல்லாமையையையும் நிலைநிறுத்தவே எனத் தெளிவுபடுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018