புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டாது:ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு ஆர்­வ­மில்லை

புதிய அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­ப­ட­மாட்­டாது என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்­லி­ணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.  

ஐ.டப்­ளியூ.பி.ஆர். என­ப்படும் போர் மற் றும் சமா­தானம் தொடர்­பி­லான  அறிக்­கை­யிடல் குறித்த கற்கை நிலையம் சார்­பாக, அமைச்சர் மனோ கனே­சனை சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே அவர் தனது அமைச்சில் வைத்து இதனை நேற்று தெரி­வித்தார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வதில் பிர­த­ம­ருக்கும், ஜனா­தி­ப­திக்கும் எந்த ஆர்­வமும் இல்லை எனவும் அதனால் புதிய அர­சியல் அமைப்பு என்­பது சாத்­தி­ய­மற்­றது எனவும் அவர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

எனினும், தனது அமைச்­சூ­டாக புதிய அர­சியல் அமைப்பில், சிங்­களம், தமிழ் ஆகிய இரு அரச கரும மொழி­க­ளுக்கும் சம­னான அந்­தஸ்­தினை உறுதி செய்யும் வித­மாக கொண்­டு­வர இருந்த திருத்­ததை 21 ஆம் அர­சியல் அமைப்பு திருத்தம் ஊடாக கொண்­டு­வர உத்­தே­சித்­துள்­ள­தா­கவும் அதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை சமர்ப்­பித்து நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அது குறித்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அமைச்சர் மனோ கனேசன் தெரி­வித்தார்.

 இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்­லி­ணக்க அமைச்சு ஊடாக மிக முக்­கி­ய­மான சேவையை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எனது பொறுப்பில் உள்ள அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் வரும் அரச மொழிகள் குறித்த கொள்­கையை சரி­யாக அமுல் செய்­தாலே நாட்டில் தேசிய பிரச்­சி­னை­யாக முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னை­களில் பெரும்­பா­லா­னவை தீர்ந்து போகும்.

 நாட­ளா­விய ரீதியில் சிங்­கள, தமிழ் ஆகிய இரு அரச கரும மொழி­களும் கண்­டிப்­பாக சரி சம அந்­தஸ்­துடன் பொது மக்­க­ளுக்கு சேவை­ய­ளிக்கும் போது பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதில் நாம் உறு­தியாக் உள்ளோம்.

 அதன்­படி, நாட­ளா­விய ரீதியில் தமிழ், சிங்­கள மொழி பயன்­ப­டுத்­தப்­படும் போது ஏற்­படும் சிக்­கல்­க­ளுக்கு நாம் தீவு வழங்­கு­கின்றோம். சில இடங்­களில் பெயர் பல­கை­களில் தமிழ் மொழி மிகத் தவ­றாக எழு­தப்­பட்­டுள்­ளது. அவற்றை திருத்த நாம், சமூக வலைத்­தளம் ஊடாக விஷேட திட்டம் ஒன்­றினை அமுல் செய்தோம். அதன்­படி பல பெயர் பல­கை­களை திருத்­தியும் உள்ளோம்.

 அரச கரும மொழிகள் ஆணைக் குழு­வூ­டாக நாம் இந்த மொழி தொடர்பில் எழும் சிக்­கல்­களை தீர்த்து வரு­கின்றோம். பெயர் பல­கை­களில் மட்­டு­மன்றி, எங்­கேனும் தனது தாய்­மொ­ழியில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் சிக்கல் ஏர்­பட்டால் அது குறித்து அரச கரும மொழிகள் ஆணைக் குழு­வுக்கு அறி­யத்­த­ரலாம். அப்­போது நாம் விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்தி அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம்.

 எமது அர­சி­ய­ல­மைப்பில் அரச மொழி குறித்த அத்­தி­யா­யத்தில், முதலில் சிங்­கள மொழி அரச மொழி எழு­தப்­பட்­டுள்­ளது. அடுத்த வரியில் தனி­யா­கவே தமிழ் மொழியும் அரச கரும மொழி என கூறப்­பட்­டுள்­ளது. தமிழ் மொழியும் அரச கரும மொழி என கூறப்­பட்­டி­ருப்­பதன் ஊடாக தமிழ் மொழிக்­கு­ரிய சம அந்­தஸ்து தொடர்பில் சிறு சிக்கல் உள்­ள­தாக தோன்­று­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஊடாக இதனை திருத்தி சிங்­கள, தமிழ் மொழிகள் அரச கரும மொழி என எழுத உத்­தே­சித்­தி­ருந்தோம். எனினும் தற்­போ­தைய சூழலில் புதிய அர­சியல் அமைப்பு கொண்டு வரப்­ப­ட­மாட்­டாது. ஜனா திப­தியும் பிர­த­மரும் புதிய அர­சியல் யாப்பை கொண்டு வரு­வதில் எந்த அக்­க­றை­யையும் கட­ட­வில்லை.

 எனவே நாம் உத்­தே­சித்த அர்­சியல் அமைப்பு திருத்­ததை, 21 ஆம் அர­சியல் திருத்தம் ஊடாக கொண்டு வந்து சிங்­கள, தமிழ் மொழியின் சமத்­து­வத்தை உறுதி செய்ய உத்­தே­சித்­துள்ளோம்.

 இத­னை­விட தற்போது சிங்கள, தமிழ் மொழிகளில் அரச நிருவங்களில் சேவையை வழ்னக்க போதிய ஆளணி இல்லாத நிலையில், மொழி ஒருங்கினைப்பாளர்களை மிக விரைவில் அது தொடர்பில் நியமிப்போம். அதற்கான ஆரம்ப கட்ட வேலிஅகள் தற்போதும் இடம்பெற்றுக்கொன்டிருக்கின்ரன. ஒரு குரிப்பிட்ட பிரிவுக்கு பயிற்சிகளும் அளிக்கப்ப்ட்டு வருகின்றன. என்றார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018