இலங்கை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

கட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை நிர்வாகத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


டோஹாவில் உள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலைக்கு முன்னாள் அதிபர் குமுது பொன்சேகாவிற்கு பதிலாக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாடசாலைக்கான புதிய கட்டிட நிர்மாண பணிகள் 3 மாத காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.

கட்டார் அரசாங்கம் இலங்கை சமூகத்தின் கல்வியை கருத்திற் கொண்டு துமாமா சந்தியில் 10,000 சதுர மீட்டர் காணியொன்றை வழங்கியுள்ளது.

இந்த நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு சமீபத்தில் புதிய தலைவரை இந்த பாடசாலைக்கு நியமித்தது.

குறித்த பாடசாலையில் தலைவராக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய 4ம் திகதி நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பின் மூலம் இந்த நியமனம் இடம்பெற்றது.

தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நியமனம் இடம் பெற்றதாக இந்த தூதுவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை சமூக நலனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய தலைவரின் நியமனத்தை அடுத்து இந்த பாடசாலை தூதரகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டாரில் கணிசமான இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், குறித்த பாடசாலையினால் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இருந்து தொழில் நிமித்தம் குடும்பமாக கட்டார் செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018