விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலாவது அரையிறுதியில் 8-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது  செட்களை 6-7, 6-7 என ஜான் இஸ்னர் கைப்பற்றினார்.

இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடினார். அதனால் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.

கடைசியாக,  ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

இறுதியில்,  ஆண்டர்சன் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24  என்ற செட்களில் இஸ்னரை வென்றார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018