எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் ஆண்டு நினைவு நாள்  

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.

இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ் அண்ணை கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி அக்கா ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995

அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இறக்கிக்கொண்டிருந்தன.

துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன.

” டோறா “ அதிவேகத் தாக்குதற்

படகுகள் எட்டு ,

” சங்காய் “ பீரங்கிப்

படகுகள் மூன்று.

இரும்புக் காவல்.

அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள்.

” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டன் அண்ணையும் தங்கண்ணையும் வெடிகுண்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள்.

ஆரம்பித்தது உக்கிரமான சண்டை.

காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.

எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர்.

” எடித்தாராவின் “ அடித்தளத்தை , வெடிகுண்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள்.

அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல. நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….!

இராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு.

வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம்.

” பெண் கரும்புலிகளின் ”

ஒரு வெடிகுண்டு படகு ,

தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது.

அசுரவேகம். மிக அண்மைய…..!

போர்களங்கள் அபூர்வமானவை.

அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில்

நினைத்துப்போவது நிகழாமல் போகும் , நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும்.

வெடிகுண்டுப்படகு சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை.

ஐந்து மணிநேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர்.

கடலில் தவழும் அலையே நான்

கடற்கரும்புலி மேஜர் தங்கண்ணை

கடற்கரும்புலி மேஜர் நியூட்டன் அண்ணை

கடற்கரும்புலி கப்டன் தமிழினி அக்கா

நியூட்டன் அண்ணை

தங்கண்ணை

தமிழினி அக்கா ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018