நான் ஈழத்தமிழன் எதற்கும் அஞ்சுவதில்லை..!! நாங்கள் நிறைய பாத்திட்டோம்..!

பிரித்தானியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் புத்திசாலித்தனமாக தப்பிய துணிச்சலான ஈழத் தமிழர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தனது நெற்றிபொட்டில் இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய போதிலும், குறித்த ஈழத் தமிழர் அச்சமடையாமல் இருந்துள்ளார்.

Long Eaton பகுதியின் Wellington Street தெருவில் சொந்தமான கடை ஒன்றை நடத்தும் சிவகுமார் ஷண்முகம் என்ற 50 வயது நபரே இவ்வாறு இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

தனது கடைக்குள் முகத்தை மூடி நுழைந்த இரண்டு நபர்கள் அவரை அச்சுறுத்திய போது அவர் அச்சமடையாமல் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், நேற்றைய தினம் சிவகுமார் சம்பவத்தை பிரித்தானிய ஊடகத்திடம் விபரித்துள்ளார்.

தனது நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்தவுடன் அமைதியாக இருந்த சிவகுமார் கடும் முயற்சியின் பின்னர் ஒருவரின் முகத்தில் இருந்த முகமூடியை பறித்துள்ளார்.

இதன் போது அந்த துப்பாக்கி போலியானதென அறிந்த சிவகுமார் அவர்களை கடைக்கு வெளியே விரட்ட ஆரம்பித்தார். திருடர்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.

‘நான் இலங்கையை சேர்ந்தவன்.. நாங்கள் நிறைய சம்பவங்களை பார்த்துவிட்டோம். இவற்றிற்கு எல்லாம் அஞ்சுவதில்லை’ என சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு சாதாரண விடயம். அது என்னை பாதிக்கவில்லை. அவர்களின் முகமூடியை பறித்த போதிலும், முகத்தை பார்க்க முடியவில்லை. எனினும் அவர்கள் இருவரும் ஆண்கள் என்பது மாத்திரம் உறுதியாக தெரியும்.

நான் அந்த திருடங்களை எப்படியாவது பிடித்து விட நினைத்தேன். ஏன் என்றால் இந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது. எனினும் என்னால் இயவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவரது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர்.

சிவகுமார் தனது 48 வயதுடைய மனைவி ஜெயந்தியுடன் வாழ்ந்து வருகின்றார். இந்த கடையை அவர் சொந்தமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018