தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில் இன்று ஆரம்பம்

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் அனுசரணையுடன் தேசிய பரா ஒலிம்பிக் சங்கம் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் இன்று 20ஆம், 21ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிக்காக நடத்தப்படுகின்ற வருடத்தின் மிகப் பெரிய மெய்வல்லுனர் போட்டித் தொடராக அமைந்துள்ள இம்முறை தேசிய பராமெய்வல்லுனரில் நாடாளவிய ரீதியில் இருந்துசுமார் 40 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 800இற்கும் அதிகமானவீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தின் பிரதித் தலைவரும், பராமெய்வல்லுனர் பிரிவின் பொறுப்பு அதிகாரியுமான கேர்னர் தீபால் ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், 180 பரா மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள இம்முறைபோட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் அடுத்த மாதம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசியபராவிளையாட்டுவிழாவுக்குநேரடியாகத் தகுதிபெற்றுக் கொள்வர்.

இதேநேரம், குறித்த போட்டித் தொடருக்கான இலங்கை பரா மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான முதலாவது தகுதிகாண் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 160 வீரர்கள் இந்த தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்டதுடன், இதில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 44 வீரர்களை தேசிய பரா மெய்வல்லுனர் குழாமுக்காக தெரிவுசெய்வதற்கு இலங்கைபராஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கைஎடுத்திருந்தது.

குறித்த தகுதிகாண் போட்டிகளில் றியோபரா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தையும்,கடந்தவருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வுபெற்றமுன்னாள் வீரரான தினேஷ் பிரயன்தஹேரத்,மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் 63.70 மீற்றர் தூரத்தை எறிந்து உலகின் 2ஆவது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து, உலகசாதனை அடைவு மட்டத்தை அண்மித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க,பொது நலவா ய விளையாட்டு விழாவுக்காக இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்காககடந்தமார்ச் மாதம் முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் இலங்கைபரா மெய்வல்லுனர் அணியின் நட்சத்திர வீராங்கனையான அமரா இந்துமதி பெண்களுக்கான 400 மீற்றரில் பங்கேற்று இவ்வருடத்துக்கான தனது அதிசிறந்தநேரப் பெறுமதியை பெற்றுள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018