அரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…! “புலி இயக்கத்தின் பிறப்பு”

“புலி இயக்கத்தின் பிறப்பு”

எழுபதின் ஆரம்பத்தில், தனிப்பட்ட முறையிலும், குழு ரீதியிலுமாக கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ் இளைஞரின் புரட்சிகர உத்வேகமானது, புரட்சிகரக் கொள்கையிலும் நடைமுறையிலும் கட்டி எழுப்பப்பட்ட இயக்கமொன்றில் வெளிப்பாடு காண விழைந்தது, தமிழ் அரசியல் கட்சிகளோ அன்றி இடதுசாரி இயக்கங்களோ கிளர்ச்சிப் போக்குடைய இளைஞரின் புதைந்து கிடந்த புரட்சிகர சக்திக்கு களம் அமைத்துக் கொடுக்கும் செயற் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை.

பழமைவாத முதலாளிய சித்தாந்தத்தினுள் சிக்குண்டு கிடந்த தமிழ்த் தேசியகட்சிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாராளுமன்றத்திற்கு முண்டு கொடுத்து நின்றன. தமிழ்த்தேசியவாதத் தீயைப் பற்றி எரியச் செய்து, விடுதலை இலட்சியம் பற்றி ஆவேசமாகப் பேசிடினும் தமிழினத்தின் தேசிய சுதந்திரத்திற்கு வழிகோலும் உருப்படியான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எதையும் இக்கட்சிகள் முன்வைக்கவில்லை.

பழைய இடதுசாரிக் கட்சிகளோ சிங்களப் பேரினவாத சித்தாந்தத்திற்குள் சிறைபட்டுக்கிடந்தன. இதனால் இவர்கள் தமிழரின் தேசிய விடுதலை எழுச்சியின் யதார்த்த புறநிலைத் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையோ அல்லது தமிழ்ப் புரட்சிவாத இளைஞரின் புரட்சிகர அபிலாசைகளை அணிதிரட்டும் சக்தியையோ அற்றிருந்தனர்.

இப்படியான அரசியல் சூன்யத்தை எதிர்கொண்டும், அதேவேளை தாங்கொண்ண ஒடுக்குமறையால் எழுந்த புரட்சிகர சூழ்நிலையில் சிக்குண்டும் தத்தளித்த தமிழ் இளைஞனுக்கு விடுதலைப் பாதையை முன்னெடுத்துச் செல்லவல்ல புரட்சிகர அரசியல் இயக்கமொன்று அவசியமாயிற்று. இந்த சூழ்நிலையிலேயே 1972 ல் எமது இயக்கம் சரித்திர ரீதியாகப் பிறப்பெடுத்தது.


(தொடரும்….)

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018