மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு

கடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த பெரு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்ற மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் குறித்த வரவேற்பளிக்கப்பட்டது.

மன்னார் பிரதான பாலத்தடியில் காலை 10 மணியளவில் குறித்த வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது வெற்றி வாகை சூடிய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பாட சாலை அதிபர்கள், மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வெற்றி பெற்ற மாணவர்கள் பேன்ட் வாத்திய இசையுடன் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.இதன் போது சர்வமதத் தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்தனர்.

வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களுக்கிடையில் குறித்த போட்டிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தது.

தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த போட்டிகளில் வேறு மாவட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய நிலையில் 11 வருடங்களின் பின் முதல் தடவையாக மன்னார் கல்வி வலய மாணவர்கள் வடமாகாண ரீதியில் முதல் இடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018