தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் இலங்கை அணி 277 /9 ஓட்டங்கள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான குணதிலக்க,கருணரத்தன முறையே 57 ,53 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.இருவரும் நிதானமாக அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.பின்னர் தனஞ்ஜய டி சில்வா 60 ஓட்டங்களையும் மென்டிஸ் 21 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 10 ஓட்டங்களுடனும் சில்வா 22 ஓட்டங்களையும்அகில தனஞ்ஜய 16 ஓட்டங்களுடனும் ரங்கன ஹேரத் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் காலி டெஸ்ட் போன்று இந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்காக முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இப்போட்டியினை நடாத்தும் எஸ்எஸ்சி சர்வதேச மைதானத்திற்கு இது 42 ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், ஆசிய நாடுகளில் அதிக டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்ற மைதானமாக இந்த டெஸ்ட் போட்டி மூலம் எஸ்எஸ்சி சர்வதேச மைதானம் மாறியிருந்தது.

காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியிடம் 278 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில், வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரை சமநிலைப் படுத்த முடியும் என்கிற காரணத்தினால் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இலங்கை வீரர்களை எதிர்கொண்டிருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து சகலதுறை வீரர் வெர்னோன் பிலாண்டர் மற்றும் சைனமன் சுழல வீரர் தப்ரைஸ் சம்சி ஆகியோருக்குப் பதிலாக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தியோனிஸ் டி ப்ரெய்ன் உம், வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ன்கிடி உம் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா

டீன் எல்கார், அய்டன் மார்க்ரம், ஹசிம் அம்லா, டெம்பா பவுமா, பாப் டு ப்ளேசிஸ் (அணித் தலைவர்), தியோனிஸ் டி ப்ரெய்ன், குயின்டன் டி கொக், லுங்கி ன்கிடி, கேசவ் மகராஜ், ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

மறுமுனையில், தொடரில் 1-–0 என முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அகில தனன்ஜயவுக்கு வாய்ப்பு தந்திருக்கின்றது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் (அணித்தலைவர்), அகில தனன்ஜயஇலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ மெத்யூஸ் தென்னாபிரிக்கவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூர்ய,அரவிந்த டி சில்வா, டில்ஷான், சமரவீர, அர்ஜுன ரணதுங்க போன்றோரின் வரிசையில் ஐயாயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரராக மெத்யூஸ் தனது பெயரையும் பதித்துள்ளார். 75 போட்டிகளில், 133 இனிங்ஸ்களில் விளையாடி இதுவரை எட்டு சதங்களையும் இருபத்தெட்டுஅறைச்சதங்களியும் பெற்றுள்ளார்.

இரு தடவை மாத்திரமே ஓட்டமற்ற நிலையில் ஆடுகளத்தினை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பந்து வீச்சில் கேஷவ் மஹகராஜ் 8 விக்கெட்டையும் ரபடா ஒரு விக்கெட்டையும் பதம்பார்த்தனர்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019