புலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்! சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்

ராஜபக்ஸர்கள் புலிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் உள்ளனர், சீனாவிடம்இருந்து லஞ்சத்தை பெற்றும் உள்ளனர் என கல்வி அமைச்சர் அகிலவராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளார்என அமெரிக்காவின் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

மேலும் நாட்டின் உரிமையை மாத்திரம் இன்றி புலனாய்வு பிரிவு, புலனாய்வுத் தகவல்களையும் வேறு நாடுகளுக்கு வழங்கும் நடவடிக்கை தொடர்பாகவும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது.நாட்டை காட்டிக்கொடுத்து இலஞ்சம் பெற்றுள்ளனர். அதேபோல் விடுதலைப்புலிகள்அமைப்பினருக்கும் ராஜபக்ஸர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு லஞ்சம் வழங்கி வடக்கு, கிழக்கின் வாக்களிப்பை தடுத்து நிறுத்தி ஆட்சிக்கு வந்ததும் இவர்களே என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவர்கள் தற்போது வேறு வேறுவிடயங்களை கூறி மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும், கல்வி அமைச்சர் அகிலவராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018