இலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

கடற்சார் பாதுகாப்பு, பாதுகாவல் மற்றும் சமுத்திரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான 3ஆவது இலங்கை-ஜப்பான் கலந்துரையாடல் நடைபெற்றது.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விரிவான பங்குடைமை பற்றிய இணை பிரகடனத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒத்துழைப்பின் முக்கியவொரு தூணாக அமைகின்றதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 2015ஆம் ஆண்டின் ஜப்பானுக்கான விஜயத்தின்போது நிறைவடைந்தது.

கடல்சார் பிரதேசங்களின் பாதுகாப்பு, பாதுகாவல் மற்றும் சமுத்திரம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவமானது ஜப்பானுக்கான இலங்கை தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட விஜயங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.கடல்வழி மற்றும் வான்வழி சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கும், தடுக்கப்படாத வர்த்தகம் உட்பட சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க கடற்சார் ஒழுங்கமைப்பை பேணவும் இந்த விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரண்டு நாடுகளும் அர்ப்பணித்துள்ளன.

 இந்த கலந்துரையாடலானது இந்து-பசுபிக் மற்றும் இந்திய சமுத்திர பிராந்தியம் நிலைமை பற்றிய விடயங்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் தொடர்பான ஒத்துழைப்பு, கடற்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் மற்றும் பிராந்திய பல்தரப்பு முன்னெடுப்புகள் பற்றிய விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தியது. இரண்டு கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் பல்வேறு பயிற்சி வாய்ப்புக்கள் வழங்கியமை உட்பட ஜப்பான் அரசாங்கத்தால் இலங்கை கடற்சார் பாதுகாப்பின் கடற்கரை பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தல் தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விரிவான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கத்தால் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுகூட்டத்தின் போது, இரண்டு தரப்புகளும் ஜப்பான் கடற்சார் சுய-பாதுகாப்பு படைகள் மற்றும் இலங்கை கடற்படை, இலங்கை வான்படை மற்றும் இலங்கை கடற்கரை காவல் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இணங்கின.

 மேலும், இரண்டு தரப்புகளும் ஆசியான் பிராந்திய அமைப்பு (ARF) மற்றும் கடற்கொள்ளையை தடுத்தல் மற்றும் ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான ஆயுதக்கொள்ளை பற்றிய பிராந்திய ஒத்துழைப்பு உடன்படிக்கை உட்பட இந்த விடயங்கள் பற்றிய கலந்தரையாடல்கள் தொடர்பில் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை உணர்ந்து பல்துறை வேலைச்சட்டகங்கள் பற்றியும் கலந்துரையாடின.

 இக்கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை தூதுக்குழுவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சமுத்திர அலுவல்கள் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் சசிகலா பிரேமவர்தனவால் தலைமை வகிக்கப்பட்டதுடன் ஜப்பான் தூதுக்குழுவானது ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தென்மேற்கு ஆசிய பிரிவு பணிப்பாளர் திரு. சோகோ யொசிடாகெ  தலைமை தாங்கினார்.

 இலங்கை தூதுக்குழுவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு, இலங்கை வான்படை மற்றும் இலங்கை கடற்கரை காவற்படை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடங்கியிருந்ததுடன், ஜப்பான் தூதுக்குழுவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, ஜப்பான் தூதரகம், கொழும்பு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் ஜப்பான் கடற்கரை பாதுகாப்பு காவல்படை பிரிதிநிதிகளை உள்ளடக்கியிருந்தது.

 Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019