120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது!

இந்தியா – அரியானா மாநிலத்தில் 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பாபா அமர்புரி என்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த மந்திரவாதியை தேடி குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பல பெண்கள் வருவது வழக்கம்.

தன்னிடம் வரும் பெண்களுக்கு மந்திர தந்திரங்களால் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி மீண்டும் மீண்டும் தன்னிடம் வருமாறு செய்து வந்துள்ளார்.

தன்னை நம்பி தொடர்ந்து வரும் பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். மேலும் பெண்களை தனது கைத்தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்தும் பெண்களை தனது ஆசைகளுக்கு அடிபணிய வைத்துள்ளார்.

இந் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் குறித்த மந்திரவாதி தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டில் “அமர்புரி என் கணவருக்கு தெரிந்தவர் அடிக்கடி அவரை சந்தித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது கோயிலுக்கு வருமாறு அழைத்தார். அழைப்பின் பேரில் சென்றேன். கோயிலில் வைத்தே என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்” என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை நடத்தியதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முன் வந்து மந்திரவாதிக்கெதிராக முறைப்பாடு செய்தனர்.

பாதிக்கப்பட்ட பல பெண்கள் செய்த முறைப்பாட்டினை கருத்தில் கொண்டு மந்திரவாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலம் மந்திரவாதியிடமிருந்து 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வீடியோக்கள் அடங்கிய கைத்தொலைப்பேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019