இலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெ்ஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 -0 எனக் கைப்பற்றியது.


காலி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் பேட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களினால் அபாரமாக வெற்றி பெற்றது. இதனையடுத்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுதாட ஆரம்பித்த இலங்கை  அணி தனது முதலாம் நாள் முடிவின்போது ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதையடுத்து  277 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தபோது இலங்கை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்த இன்னிங்ஸில் பந்து வீச்சில் அசத்திய அசத்திய கேஷவ் மஹாராஜன் 129 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனையடுத்து இரண்டாவது நாளிலேயே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி 34.5 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்ககளை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை  அணி சார்பாக தில்ரூவான் பெரேரா  4 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய டிசில்வா 5 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந் நிலையில் 214 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித் இலங்கை அணி இரண்டாம் நாள் போட்டி நேர முடிவின் போது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனது.


இதனையடுத்து போட்டியின் மூன்றாம் நாளான நேற்று 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது ஆட்டத்தை இடை நிறுதிக் கொண்டது.

இதன்  பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி மூன்றாள் முடிவின் 5 விட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போட்டியின் நான்காம் நாளான இன்று இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை துல்லியமாக எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடி வந்த தெனுஷ் டிபுரின்,தெம்ப பவுமா தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றனர்.

அதன்படி இவர்கள் இருவருமாக இணைந்து 113 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது தெம்ப பவுமா 63 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். இவரையடுத்து தென்னாபிரிக்க அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின. 

அந்த வகையில் டீகொக் 8 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து போட்டியில் அசத்தலாகவும் பொறுமையாகவும் ஆடி வந்த தெனுஷ் டிபுரின் சதம் ஒன்றை பெற்றதன் பின்னர் 101 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை ரங்கன ஹேரத்தினுடைய பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86.5 ஓவர்களுக்கு 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் இலங்கை அணி 199 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது

இலங்கை அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ரங்கன ஹேரத் 98 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் தில்றூவான் பெரேரா 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்ச 67 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடரின் ஆட்ட நாயகனாகவும் திமுத் கருணாநாயக்க தெரிவானர். 


Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019