27ஆவது அகில இலங்கை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கண்டியில்

நெஸ்லே லங்கா , இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கம் என்பவை இணைந்து நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 27ஆவது அகில இலங்கை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கண்டி போகம்பரை மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இலங்கையின் எதிர்கால தேசிய வலைப்பந்து வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சியில் கைகோர்த்துள்ள நெஸ்லே லங்கா நிறுவனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கம் ஆகியவையின் இணைப்பில் நடைபெறும் இந்த போட்டித் தொடரில் சுமார் 4000 பாடசாலை மாணவர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ் மற்றும் 18 வயதின் கீழ் என்ற மூன்று வயதுப் பிரிவுகளுக்கிடையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை ரீதியில் 480 பாடசாலைகள் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த போட்டித் தொடரில், ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏ பிரிவில் 390 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பி பிரிவில் 90 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் 4000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்கேற்கலாம் எனவும், பி பிரிவில் 1000 இற்கு குறைந்த மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை பணிப்பாளர் மஞ்சுள காரியவசம், “அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் வெற்றிகரமாக நடைபெறுவதற்கான, அனைத்து வசதிகளும் கண்டி போகம்பரை மைதானத்துக்கு செய்து கொடுக்கப்படும். அத்துடன் போட்டித் தொடரை 27ஆவது தடவையாகவும், தொடர்ந்து நடத்துவதற்கு உதவிகளை வழங்கும் நெஸ்லே நிறுவனத்துக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்றார்.

இலங்கையின் வெளி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை இந்த போட்டித் தொடரில் பங்கேற்க வைப்பது இலங்கை பாடசாலை வலைப்பந்து சங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இதன்படி இவ்வருடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் பங்கேற்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஒரு பாடசாலை மாணவியின் கனவு வலைப்பந்தாட்ட வீராங்கனையாக வேண்டும் என்றால், அவரது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கான ஆரம்பமே இது. இன்னும் அதிகமான தூரம் செல்லவேண்டும். போட்டித் தொடரை நடத்துவதற்கு உதவிகளை வழங்கிய கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை மற்றும் மைலோ நிறுவனம் என்பவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என இலங்கை பாடசாலைகள் வலைப்பந்து சங்கத்தின் தலைவி மாலனி ஹேரத் குறிப்பிட்டார்.

இலங்கை பாடசாலை வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் கடந்த வருடத்தின் 13 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் பிரிவுகளில் சம்பியன் பட்டங்களை குருணாகல் திருக்குடும்ப கன்னியார் மடம் கைப்பற்றியதுடன், 17 வயதின் கீழ் போட்டியின் மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டது. இதனையடுத்து 15 மற்றும் 17 வயதின் கீழ் சம்பியன் பட்டங்களை முறையே களுத்துறை மகளிர் வித்தியாலயம் மற்றும் விசாகா வித்தியாலயம் ஆகியவை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar