நார்வே பெண்கள் கற்பழிப்பு- இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்து அதோடு அவரது வருமானத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் ஆடுகிறார்.

இவர் தனது தந்தையை பார்க்க சமீபத்தில் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த நார்வே நாட்டு பெண்கள் 2 பேரை குணதிலகா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து செல்லக்கூடாது என்பது விதியாகும். இதன் காரணமாகவே குணதிலகா சஸ் பெண்டு செய்யப்பட்டார்.

நார்வே பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணதிலகாவின் நண்பரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் போலீசார் இன்னும் சுமத்தவில்லை.

தான் அறையில் தூங்கி கொண்டு இருந்ததாகவும், தனது நண்பருக்கும், நார்வே பெண்ணுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்து இருக்கிறார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018