கண்டி திரித்துவக் கல்லூரி மாணவன் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராகத் தெரிவு

ஒவ்சேவர் – மொபிடெல் என்பன இணைந்து நெறிப்படுத்திய சிறந்த பாடசாலை கிரி்க்கெட் வீரருக்கான விருதினைக் கண்டி திரித்துவக் கல்லூரி மாணவர் ஹசித போயாகொட ஈட்டிக்கொண்டார். அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கும் நாற்பதாவது நிகழ்ச்சியின் போதே இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கல் தொடரில் இக்கல்லூரி பெறும் மூன்றாவது விருது இதுவாகும். 2000 ஆம் ஆண்டு கௌசல் வீரரத்ன. 2012 ல் நிரேஷன் திக்வெல்ல என்போர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக விருது பெற்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

இவ்விருது வழங்கல் தொடரில் முதன் முதலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரி மாணவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி மத்தியஸ்தருமான ரஞ்சன் மடுகல்ல நாற்பதாவது விருது வழங்கல் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கல் வைபவம் ஒப்சேவரின் அனுசரணையோடு 1979 ஆம் ஆண்டு ஆரம்பமானது. 2008ல் மொபிடெல் நிறுவனமும் இணைந்து இவ்விருது வழங்கல் நிகழ்வினை முன்னெடுத்துச் செல்கின்றன. இதுவரை கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒன்பது முறை இவ்விருதினைத் தட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019