கம்பீர குரலோடு கருணாநிதி மீண்டும் அரசியல் பணி செய்ய பிரார்த்தனை; விஜயகாந்த்!

கருணாநிதி உடல்நலம் பெற்று, மீண்டு வர விஜயகாந்த் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். 

திமுக தலைவராக கருணாநிதி 50வது ஆண்டை எட்டியுள்ளார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக, உடல்நலிவு அடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. 

அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே கருணாநிதி உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் விசாரித்தனர். அவர் உடல் நலத்துடன் இருப்பதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018