சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சர்கார் கூட்டணி

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.14 படக்குழுவில் `சர்கார்' கூட்டணி இணைந்திருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் மூன்று பாடல்களை எழுதுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது,`எஸ்.கே.14 படத்தின் மூலம் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைகிறேன். அவரது மயக்கும் இசைக்கு அடுத்தடுத்து மூன்று பாடல்களை எழுதுகிறேன்.

வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிக்க இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018