பட்டினியால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கிழக்கு டெல்லியின் மந்தவாளி பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு போதுமான அளவு வருமானம் இல்லை. மேலும் இவரது மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்கமால் இருந்துள்ளனர். 

இந்நிலையில் வீட்டுக்கு வாடகை கொடுக்கததால், வீட்டின் உரிமையாளர் அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதை தொடர்ந்து வேறு பகுதிக்கு மங்கள் குடும்பத்துடன் குடியேறினார். அப்போது அவருடைய ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக, அக்கம் பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மங்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடியுள்ளனர், இதனிடையே மங்கள் வேலைக்காக சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியிடத்திற்கு சென்றார். தாய், தந்தை கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த மூன்று சிறுமிகளும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். 

பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்துவிசாரணை நடத்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உத்தரவிட்டார். அதன்படி இந்த சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018