ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து விளக்கம் அளித்த டாப்சி

நடிகை டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மேதிஸை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு டாப்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் டாப்சிக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.

கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது ஆண் நண்பருடன் ஊர் சுற்றுவதாக செய்தி வந்தது. அது குறித்து டாப்சி வாய்திறக்காமல் இருந்து வந்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் அவர் பழகி வந்தார்.

இந்நிலையில் டாப்சிக்கும், மேதிசுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார் டாப்சி. அங்கு மேதிசும் வந்திருந்தார்.

எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இதனை டாப்சி மறுத்து இருக்கிறார். என் பெற்றோருடன் கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தான் சென்றேன் என்று கூறி உள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018