ஐஸ்வா்யாவை தவிா்த்து மும்தாஜூடன் கூட்டணி சோ்ந்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பா்களாக இருந்து வந்த யாஷிகாவுக்கும், ஐஸ்வா்யாவுக்கும் இடையில் இன்று சண்டை ஏற்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தவார லக்சூரி டாஸ்கில், எங்க ஏரியா உள்ள வராத என்ற போட்டி நடைபெற்றது. இதில் ஜனனி தலைமையில் ஒரு அணியும், மும்தாஜ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து விளையாடியது. போட்டி இன்று இறுதி நாளை எட்டியது. இறுதி நாளில் இரு அணிகளும் அதிகப்படியான இடங்களை கைப்பற்ற எந்த வகையான யுக்தியை வேண்டுமானாலும் கையாளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இரு அணியினரும் எதிரணியினரின் கொடிகளை அகற்றி தங்கள் கொடியை நாட்ட மிகுந்த சண்டையிட்டுக் கொண்டனா். போட்டியின் போது சிலருக்கு ரத்த கசிவுகளும் ஏற்பட்டன. இறுதியாக போட்டியின் முடிவில் மும்தாஜ் தலைமையிலான அணியினா் வெற்றி பெற்றனா். இதனைத் தொடா்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு லக்சூரி பட்ஜெட்டுக்கான அனைத்து புள்ளிகளும் வழங்கப்பட்டன. 

மேலும் இரு அணியில் இருந்தும் சிறப்பாக விளையாடிய போட்டியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி யாஷிகாவும், சென்ட்ராயனும் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா். அவா்களை அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துறைக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மோசமாக விளையாடிய மும்தாஜ், பொன்னம்பலத்திற்கு 3 கூடைகள் நிறைய ஷூ பாளிஷ் செய்ய கொடுக்கப்பட்டது.

தொடா்ந்து இந்த வாரத்திற்கான லக்சூரி பட்ஜெட்டை மும்தாஜ் தலைமையிலான அணியினா் செய்தனா். போட்டியின் போது மகத், மும்தாஜ் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சண்டையின் பலனாக யாஷிகா ஐஸ்வா்யா, மகத்தை தவிா்த்து மும்தாஜூடன் இணைந்தாா். யாஷிகாவின் பிரிவால் ஐஸ்வா்யா அழுதபடியாக இன்றைய பிக்பாஸ் நிறைவு பெற்றது. 

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018