கலாமின் பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள் திருட்டு: தேடும் குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றை மீட்க, அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர். 

கலாமின் மூத்த சகோதரர் ஏபிஜே முகமது முத்து மீரா மரக்காயர் எழுதிய 2 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கலாமின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான @apkabdulkalam மற்றும் பேஸ்புக் பக்கம் திருடப்பட்ட விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். 

கலாம் பெயரில் நூற்றுகணக்கான அமைப்புகள் செயல்படுவதை எங்களின் சட்ட ஆலோசனை குழு, கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்புகளின் உண்மைதன்மை குறித்து பலர் எங்களிடம் விசாரிக்கின்றனர்.

கலாம் மையம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வரும், கலாமிடம் பகுதி நேரமாக பணிபுரிந்த ஸ்ரீஜன் பால் சிங் என்பவர் அவரின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார். அவர், பணம் வசூலிப்பதாக எங்களுக்கு தகவல் வருகின்றன.

கலாமின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீஜன் பால் சிங்கிடம் கேட்டோம். அவர், டுவிட்டரில் கலாமை பின் தொடர்ந்த லட்சகணக்கானரோ, தான் நடத்தி வரும் கலாம் மையத்தின் டுவிட்டர் பக்கத்திற்கு மாற்றி கொண்டு, உண்மையான பக்கத்தை எங்களிடம் ஒப்படைத்தார்.

தற்போது, 1000 பேர் மட்டுமே கலாமின் அதிகார பூர்வ பக்கத்தை பின் தொடர்கின்றனர். கலாமின் கொள்கைகளை விளக்கும் டுவீட்களை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம். அவை அனைத்தும் தற்போது காணவில்லை. 

கலாமுடன் முழுநேரமாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரிந்த சிலர் கலாமின் பெயருக்கு அவதூறு பரப்புவதை தடுத்து நறுத்தவும், அவரது பெருமையை நிலைநாட்டவும், பிரதமர் தலையிட வேண்டும்.

லட்சக்கணக்கானோர் ஏமாற்றப்படாமல் இருக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம், பாதுகாப்பு, உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018