வெங்கடேச பிரபு கஸ்தூரி ராஜ் என்று பெயர் கொண்ட தனுஷின் 35வது பிறந்தநாள் ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவை வியக்க வைத்த அளவிற்கு உயரத்தை எட்டிய நடிகர் தனுஷ் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகரைத் தொடர்ந்து பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், திரைக்கதை, மற்றும் பாடலாசிரியர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவை வியக்க வைத்த அளவிற்கு உயரத்தை எட்டிய தனுஷ் இன்று தனது 35வது (28 ஜூலை, 1983) பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரைப் பற்றி பலரும் அறியாத விஷயங்களை இப்போது பார்ப்போம்… 

1.இவரது உண்மையான பெயர் வெங்கடேச பிரபு கஸ்தூரி ராஜ். 

2.எப்போதும், சைவ உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடக்கூடியவர். இவருக்கு அசைவ உணவுகள் பிடிக்காதாம். 

3.தனது 16வது வயதில், அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்தார். இது தனுஷிற்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

4.இவருக்கு ஹிந்தி பேச தெரியாதாம். 

5.எஃப் சி பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தீவிர ரசிகர். 

6.தனது 21வது வயதில், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 

7.ஆனால், தனுஷை விட ஐஸ்வர்யா இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

8.தனுஷ் தன்னுடைய 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். 

9.டுவிட்டரில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ள முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார். 

10.குறைந்த வயதிலேயே தேசிய விருது பெற்ற ஒரே நடிகர் இவர் தானாம். 

11.நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என்றுக்கு 3 தேசிய விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். 

12.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். 

13.இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் யூடூப்பில் 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 

14.இந்தப் பாடலை வெறும் 6 நிமிடத்தில் எழுதி முடித்துள்ளார். 

15.கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவின் ஹாட்டஸ்ட் வெஜிடேரியன் விருது பெற்றுள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் வட சென்னை, மாரி 2 மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018