பேஸ்புக் மூலம் தற்கொலைக்கு முயன்ற சிறுமி ; இறுதியில் நடந்தது என்ன?

அசாம் மாநில தலைநகரான கௌகாத்தியை சேர்ந்து சிறுமி ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதை கவனித்த ஃபேஸ்புக் நிர்வாகம், தனது தலைமையகத்திலிருந்து மாநில காவல் துறைக்கு தகவல் அளித்தது. உடனே இந்த தகவல் அசாம் டிஜிபி குலாதார் சையிகாவை சென்றடைந்தது.


அவர் சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தார். அவர்கள் மகளை சமாதானப்படுத்தி, ஃபேஸ்புக் பதிவை நீக்குமாறு கேட்டுக்கொண்டனர். பிறகு சிறுமி தனது தற்கொலை குறித்த முகநூல் பதிவை நீக்கினார். இது தொடர்பாக அசாம் மாநில காவல் துறை, தற்கொலைக்கு முயன்ற சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் தனது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், அசாமின் அசாரா என்ற புறநகர் பகுதியை சேர்ந்த சிறுவன், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் பலமுறை கேட்டும் தனது பெற்றோர் டிஜிட்டல் கேமராவை வாங்கி தர மறுப்பதாகவும், அதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த சிறுவன் தெரிவித்திருந்தார்.

அப்போதும் இந்த வீடியோ தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, சிறுவனின் தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar