யாஷிகாவுடன் அவர் கடலை போடுவது எனக்கு பிடிக்கவில்லை: மகத் காதலி

பிக் பாஸ் வீட்டில் மகத் யாஷிகாவுடன் கடலை போடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை காதலிக்கிறார். காதலி இருக்கும்போதே அவர் யாஷிகாவுடன் சேர்ந்து அநியாயத்திற்கு லூட்டி அடிக்கிறார்.

யாஷிகாவுடன் கடலை போடுவதுடன் கண்ட இடத்தில் தொடுகிறார், கட்டிப்பிடிக்கிறார்.மகத் யாஷிகாவுடன் சேர்ந்து செய்கிற வேலைகளை பார்த்து பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். பிராச்சியை மிஸ் பண்ணுகிறேன் என்று அவ்வப்போது கூறிக் கொண்டே இந்த லூட்டி அடிக்கிறார். இந்நிலையில் இது குறித்து பிராச்சி விளக்கம் அளித்துள்ளார்.

மகத் செய்வது குறித்து பலரும் அவரிடமும் குறை கூறியுள்ளனர்.மகத் செய்வதில் என்ன தவறு. மகத் தவறாக நடப்பதாக யாஷிகா ஒன்றும் புகார் தெரிவிக்கவில்லையே. அவர்கள் இருவருக்கும் பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

மகத் பற்றி பலரும் பலவிதமாக பேசி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கவே நான் ஃபேஸ்புக் லைவில் வந்தேன். அவரின் குடும்பத்தார் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் நான் அவர் சார்பில் விளக்கம் அளிக்கிறேன் என்கிறார் பிராச்சி.

யாஷிகாவுடன் கடலை போட வேண்டாம் என்று நான் மகத்திடம் கூற முடியாது. அவர் பிக் பாஸ் வீட்டில் உள்ளார். அவர் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் டிவியை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். மகத் பிக் பாஸ் வீட்டில் செய்வது பல இளைஞர்களுக்கு பிடித்துள்ளது.

யாஷிகாவும், மகத்தும் கடலை போடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மகத்தை பற்றி எனக்கு தெரியும். மேலும் இது போன்ற டிவி ஷோக்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று பிராச்சி தெரிவித்துள்ளார்.மகத்தும், யாஷிகாவும் புகைப்பிடிக்கும் அறையில் இருந்து வந்த புகைப்படத்தை பலரும் எனக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைத்திருந்தனர்.

அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்தவர்களை ஓங்கி குத்த வேண்டும் போன்று உள்ளது. மகத்தும், யாஷிகாவும் நண்பர்கள் மட்டுமே. மகத் இன்று எவிக்ட் ஆக மாட்டார் என்று பிராச்சி கூறியுள்ளார்.மகத்துக்கு ஆண் நண்பர்களை விட தோழிகளே அதிகம்.

மகத்துடன் இருந்தால் பாதுகாப்பாக இருப்பதாக அவரின் தோழிகள் உணர்கிறார்கள். அது தான் முக்கியம். அதனால் தான் அவர் பெண்களுடன் சகஜமாக பழகுகிறார். நான் மகத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் பார்த்தேன். அடுத்த ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று பிராச்சி தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018