ஓரிரு நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார்: குலாம்நபி ஆசாத்!

கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசியது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவா் கருணாநிதி, உடல்நலக் கோளாறு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்ததால், ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் காவிரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.

இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு சென்ற குலாம் நபி ஆசாத் கூறுகையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளோம். மேலும், கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும், அவரது சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

மருத்துவர்களின் சி கிச்சை முறை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சிப் பிரிவில் இருக்கும் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018