உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.

இதில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. 50-க்கு  மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

கான்பூர் மாவட்டம் கங்கை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கங்கை நதிக்கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். கனமழையில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளர். அத்துடன், பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018