நீர்நிலைகளை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை: தமிழக அரசுக்கு மதிமுக வலியுறுத்தல்

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில்,பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நீண்டகால இழுத்தடிப்புக்குப் பின்பு ஏற்கனவே இயங்கி வருகிற பழைய கல்வி நிறுவனங்களில் அரசு நிறுவனங்கள் 10க்கும், தனியார் நிறுவனங்கள் 10க்கும் தலா 1000  கோடி நிதி அளிக்க தற்போதைய மத்திய அரசு முடிவு செய்து 6 நிறுவனங்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை தொடங்கப்படாத ஜியோ நிறுவனத்தையும் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. 

தண்ணீரை வர்த்தகப்  பொருளாக்கும் தமிழக அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஏழை மக்களுக்கு அடிப்படை தேவைக்கான தண்ணீர் இலவசமாக வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் வெள்ள நீரைச் சேமிக்கப் போதுமான  கட்டமைப்புகள் உருவாக்காத காரணத்தால் நீரை முறையாக பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தவும், புதிய நீர் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக  அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019