அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையில் இவ்வருடத்துக்கான (2018) மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் மெய்வல்லுனர் போட்டிகளிலும் பெருவிளையாட்டுக் களிலும் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரி அதிபர் ஏ.கமர்டீன் தெரிவித்தார்.

மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் ஏ.ஜே.எம்.ஸிப்கான் அஹமட் என்ற மாணவன் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளான் இதேபோல் 400 மீற்றர் தடை தாண்டல் ஒட்டப்போட்டியிலும் ஏ.ஜே.எம்.ஸிப்கான் அஹமட் என்றமாணவன் முதலாம் இடத்தை பெற்றுதங்கப்பதக்கத்தை பெற்றுள்ளான்.

இதேபோல்; 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியிலும் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளனர் ஏ.ஜே.எம்.சிப்கான் அஹமட்,எம்.ஏ.எம்.றிஷ்னி ஷராப்,ஏ.எஸ்.எம்.இல்ஹாம், எஸ்.எம்.சஜீத்,எச்.எம்.அஸ்தார் ஆகிய மாணவர்களே முதலாம் இடம் பெற்றவர்களாவர்.

மேலும் 20 வயதுக்குட்பட்டஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் மூன்றாம் இடத்தைபெற்று வெண் ;கலப் பதக்கத்தை பெற்றுள்ளனர்.எம்.ஏ.எம்.றிஸ்னி ஷராப்,ஏ.ஜே.எம்.ஸிப்கான் அஹமட்,எஸ்.எம்.சஜீத்,ஏ.எஸ்.எம்.இல்ஹாம்,என்.எம்.பஹாத் ஆகிய மாணவர்களே மூன்றாம் இடம் பெற்றவர்களாவர்.

அத்தடன் பெருவிளையாட்டுக்களில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வொலிபோல் (கரப்பந்தாட்டம்) போட்டியிலும் கலந்துகொண்ட ஜே.எம்.இம்றான்,ஏ.ஆர்.எம்.சஜாத்,ஹஸன்,எஸ்.சகீக் ஜமானி, ஏ.எஸ்.எம்.இல்ஹாம், எஸ்.எம்.சஜீத்,என்.எம்.பஹாத்,ஏ.ஜே.எம்.சிப்கான் அஹமட் ஆகிய மாணவர்கள் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

இக்கல்லூரி மாணவர்கள் ஐந்து நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளவள்ளனர். இம்மாணவர்ளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுபோட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதிதொடக்கம் 21ஆம் திகதிவரைதிருகோணமலைகந்தளாய் லீலாரத்னமைதானத்தில் இடம் பெற்றது.

இதேபோல் பெருவிளையாட்டுக்கள் திருகோணமலை தர்மசிறி வித்தியாலயத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதிதொடக்கம் 22 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் பங்கு பற்றிவெற்ற பெற்றமாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பொறுப்பான உடற்கல்வி பாடஆசிரியர்கள் அவர்களை போட்டிகளுக்கு அழைத்து சென்று சகல வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் அதிபர் நன்றியை தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018