அசாம் மக்கள் பெயர்களை நீக்கி வாக்கு அரசியல் செய்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு !

தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் இருந்து 40 லட்சம் அசாம் மக்களை நீக்கி, வாக்கு அரசியலை பாஜக செய்து வருகிறது என்று திரிணமூல் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். 

அசாம் தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் சட்டத்திற்கு விரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. இன்று வெளியான இந்தப் பதிவேட்டினால் அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. 7 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதாவது வரைவு பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். இவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று அசாம் மாநில மக்கள் தொகை பதிவு ஒருங்கிணைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாங்கள் அசாம் மாநிலத்திற்கு வருவோம் முடிந்தால் எங்களை தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பெயர் மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டடுள்ளது.

மேலும் குடும்பப் பெயர் கொண்டவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. வலுக் கட்டாயமாக 40 லட்சம் பேரை மாநிலத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. அவர்களது இணையதள இணைப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் கொண்டுதான் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த விஷயத்தை அரசியல் ஆக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். 

மனிதாபிமானத்துடன் இந்த விஷயத்தை மத்திய அரசு அணுக வேண்டும். இவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா என்பதையும் தெளிவாக்க வேண்டும். இந்த செயல் மேற்குவங்க மாநிலத்தை பாதிக்கும். இதை வெறும் வாக்குக்கான அரசியலாகவே பார்க்கிறேன்.

இவர்களது பெயரை நீக்கினால் அவர்கள் எங்கே செல்வார்கள். பாஜகவுக்கு யார் ஓட்டு போடுவார்கள் என்பதை பார்த்தது பெயர்களை நீக்கியுள்ளனர். டெல்லி செல்லும்போது இது விஷயமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019