இன்று சென்னை வருகை.. கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்ட கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அவர் உடல் நிலை குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் மருத்துவமனை சென்று கருணாநிதி நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு ராகுல் காந்தி வருகை தருகிறார். 12.30 மணிக்கு அவர் விமானத்தில் சென்னை வருவதாகவும், மாலை 4 மணிக்கு காவிரி மருத்துவமனை செல்வதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018