ஈரானில் தவித்து வரும் 21 தமிழக மீனவர்கள் மீட்பு, 3-ம் தேதி தாயகம் திரும்ப நடவடிக்கை - சுஷ்மா சுவராஜ்

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி ஒருவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால், அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் ஈரான் நாட்டு முதலாளியால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி அவர்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த தகவலை மீனவர்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர். 

அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்த்தித்து 21 மீனவர்கள் மீட்பு குறித்து பேசினார். 

இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூத்தரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018