சவாலை ஏற்கிறேன், நீங்கள் நிச்சயம் தோற்றுப்போவீர்கள் - லாரன்சுக்கு ஸ்ரீரெட்டி பதில்

சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், அவரது சாவலை ஸ்ரீரெட்டி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்விதமாக அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றம்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீது பரிதாபப்படுகிறேன். ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும், நடிப்பு திறமையை அவர் நிரூபித்து காட்டினால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து, இப்போதே சம்பள முன்பணம் கொடுப்பேன் என்றும் லாரன்ஸ் கூறினார்.

லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீரெட்டி, அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நான் விசாரணைக்கு உட்கார்ந்தால் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நீங்கள் சரி என்றால் உங்கள் படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு திறமை இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் அதை நீக்கி விட்டார். 

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019