மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் நீக்கம்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுன் அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் தொடரை தங்களது வேகப்பந்து ஆற்றலைக் கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி 2- – 0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 2- – 1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இவ்வாறான நிலையில், 20க்கு 20 தொடரில் எந்த அணி வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப்பெறப் போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் இல்லாமல் 20க்கு 20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி 13 பேர் கொண்ட தமது 20க்கு 20 அணியை அறிவிக்கும் போதே, கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள செய்தியினை வெளியிட்டுள்ளது. 20க்கு 20 தொடர்களை பொறுத்தவரையில் மேற்கிந்திய தீவுகளில் மாத்திரமின்றி, கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுபவர் கிறிஸ் கெயில்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடன் முன்னணி வீரர்கள் முரண்பட்டு, போட்டிகளில் பங்கேற்க மறுத்து வரும் நிலையில், கிறிஸ் கெயில் தொடர்ந்தும் ஒருநாள் மற்றும் 20க்கு 20 அணிகளில் விளையாடி வருகின்றார். இறுதியாக, இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கு எதிரான கண்காட்சி 20க்கு 20 போட்டியில் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருந்தார்.

கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் செட்விக் வோல்டன் மற்றும் பந்து வீச்சாளர் ஷெல்டோன் கொட்ரெல் ஆகியோர் 13 பேர் கொண்ட அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உலக பதினொருவர் அணிக்கு எதிரான 20க்கு 20 அணியில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் செட்விக் வோல்டன் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஷெல்டோன் கொட்ரெல் குழாமில் இணைக்கப்பட்டிருந்தார். ஷெல்டோன் கொட்ரெல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடி 59 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை வீழ்த்தியிருந்தார்.

செட்விக் வோல்டன் மற்றும் ஷெல்டோன் கொட்ரெல் ஆகியோர் இறுதியாக கனடாவில் நடைபெற்ற குளோபல் 20க்கு 20 தொடரில் விளையாடியிருந்தனர்.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018