96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் நாளை முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பில்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் 3ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதன்படி,சுமார் 800 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறைபோட்டித் தொடரில் இருபாலாருக்கும் 38 போட்டிகள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன்,தேசியமட்டத்தில் முன்னிலைவகிக்கின்ற அனைத்து வீரர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன்,இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் தெற்காசிய,ஆசிய மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவுசெய்வதற்கானபோட்டித் தொடராகவும் இது அமையவுள்ளதால்,அனைத்துதேசிய மட்ட மெய்வல்லுனர் வீரர்களும் தமது தகுதியை நிரூபிப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வருடத்தின் மிகப் பிரதான மெய்வல்லுனர் போட்டித் தொடரான தேசியமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கடந்தகாலங்களைப் போல இவ்வருடமும் தேசியமட்டவீரர்களுடன்,புதுமுகவீரர்களும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன்,அடுத்தவருடம் நடைபெறவுள்ள 4 முக்கியபோட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு வீரர்கள் தெரிவு இடம்பெறும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதில் அடுத்தவருடம் மார்ச் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா,ஏப்ரல் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், ஓகஸ்ட்டில் கட்டாரில் மீண்டும் நடைபெறவுளள் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றுக்கான தெரிவுப் போட்டியாகவும் இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் குறித்து ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாயர் சந்திப்பு கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்றது .இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் இவ்வாறுதெரிவித்தார்.அவர் அங்குமேலும் கருத்துவெளியிடுகையில்,

ஆசிய விளையாட்டு விழாவுக்கான மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள மெய்வல்லுனர் வீரர்களில் இருவரைத் தவிர மற்றைய அனைத்து வீரர்களும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கு பற்றிதங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஆசியவிளையாட்டு விழாவுக்கு தெரிவாகிய வீரர்களின் திறமைகளைமேலும் அதிகரித்துக் கொள்ள இந்தப் போட்டித் தொடர் சிறந்த சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது.

எனினும்,கென்யாவில் பயிற்சிபெற்றுவருகின்ற 800 மீற்றர் ஓட்டத்தின் தேசிய சம்பியன் இந்துனில் ஹேரத் மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகின்ற தேசிய அரை மரதன் சம்பியன் ஹிருனிகா விஜேரத்ன ஆகியோர் இந்ததொடரில் பங்கேற்கமாட்டார்கள் எனதெரிவித்தார்.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் அனுசரணைவழங்கவுள்ளது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018