டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: “பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை” என்று பேட்டி

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

‘கூட்டாட்சி முன்னணி’ என்ற பெயரில், அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந் தேதி, கொல்கத்தாவில் அவர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த கூட்டத்துக்கு காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அழைப்பதற்காக நேற்று முன்தினம் அவர் டெல்லிக்கு சென்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, ராம் ஜெத்மலானி, சத்ருகன் சின்கா ஆகியோரை சந்தித்தார். அசாம் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தார்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் மம்தா பானர்ஜி பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். ஜனவரி 19-ந் தேதி பொதுக்கூட்டத்துக்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அறையில் மம்தா சந்தித்தார். இச்சந்திப்பு 20 நிமிடம் நீடித்தது. “அத்வானியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவரது உடல்நிலையை விசாரித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மம்தா கூறினார்.

ஜனதாதளம் (எஸ்) தலைவர் தேவேகவுடாவை சந்தித்து, பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த மம்தா பானர்ஜியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர் சந்தித்தனர்.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரவுத்தும் மம்தாவை சந்தித்தார். அவரிடம், கொல்கத்தா பொதுக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுபற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத், மம்தாவை சந்தித்தார். மம்தா ஒரு மாபெரும் தலைவர், அனைத்து எதிர்க் கட்சிகளையும் அவர் ஒருங்கிணைப்பது பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்புகளின்போது, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் கூட்டாக முறையிடவேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சினை நடந்து வரும் அசாம் மாநிலத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர், மம்தா பானர்ஜியை பேட்டி கண்ட நிருபர்கள், ‘பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. பா.ஜனதாவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்குத்தான் இப்போது முன்னுரிமை அளிக்கிறேன். பிரதமர் வேட்பாளர் குறித்து அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018