விமானநிலையத்தில் மம்தாகட்சி எம்.பி., க்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு

என்.ஆர்.சி.க்கு எதிராக பிரசாரம் செய்ய அசாம் வந்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் விமான நியைத்திலேயே சிறைபிடிக்கப்பட்டனர். அசாமில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 40 லட்சம் பேர் நாட்டை வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது.இதற்கு மேற்குவங்க திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் மம்தா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. உள்பட 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் என்.ஆர்.சிக்கு எதிராக பிரசாரம் செய்ய அசாம் சென்றனர். அவர்கள் சில்சார் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கேயே சிறைபிடித்தனர். இதனால் விமான நிலையத்தில் போலீசாருக்கும், மம்தா கட்சி எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

என்.ஆர்.சி. விவகாரத்தில் 2005-ம் ஆண்டு லோக்சபாவில் மம்தா பானர்ஜி, அநாகரீகமாக நடந்து கொண்டதை சுட்டிகாட்டி இப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு லோக்சபா எம்.பி., யாக இருந்த மம்தா பானர்ஜி பார்லி.யில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அதில் மேற்குவங்கத்திற்குள் வங்கதேசத்தவர்களின் சட்டவிரோத ஊடுருவல்கள் பேரிடராக மாறியிருக்கிறது. இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களின் வாக்காளர் பட்டியல் என்னிடம் உள்ளது.

எனது தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என கேள்வியெழுப்பினார். தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததால், ஆத்திரமடைந்த மம்தா கையில் வைத்திருந்த தீர்மான நகல்களை துணை சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வாலே மீது வீசி ஏறிந்து விட்டு அங்கேயே தமது ராஜினாமா கடித்தை வழங்கினார்.

தீர்மான நகல்களை மம்தா வீசியெறிந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அப்போது எதிராக இருந்த மம்தா இப்போது ஆதரவாக கருத்து தெரிவித்து நேர்மாறாக பேசுவது 2019-ம் பொதுத்தேர்தலில் ஓட்டு வங்கிக்காகவும், பிரதமர் நாற்காலியை குறி வைத்து தான் என மம்தா பானர்ஜி மீது காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019