உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி: அயர்லாந்து வெற்றி; இந்தியா ஏமாற்றம்

பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதியில் அயர்லாந்துடன் மோதிய இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து தொடரலிருந்து வெளியேறியது. 

லண்டனில் 14வது பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன. 

இந்த தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, ப்ளே ஆஃப் சுற்றில் இத்தாலி அணியை 3-0 என்ற கோல் கணிக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 

அதை தொடர்ந்து, இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் தொடங்கிய காலிறுதி போட்டி தொடங்கியது. இதில், தரவரிசைப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 16 வது இடத்தில் உள்ள அயர்லாந்தை எதிர்கொண்டது.ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது. மேலும் 2வது பாதி அட்டமும் 0-0 என்று சமநிலையில் முடிந்தது. அதற்கு பிறகு போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. 

அதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் ஹாக்கி உலகக்கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. 

உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரில் 1974ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018