100 கோடி வசூலித்துள்ள ஜான்வி கபூரின் படம்; அதிகாரபூர்வ தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை  தாண்டியுள்ளது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக்’. இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங்  கைட்டான் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜான்விக்கு ஜோடியாக இஷான் கட்டர் நடித்துள்ளார். இப்படம் தற்போது உலகளவில் ரூ 100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது.

ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.

ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியிலும் வசூல் சாதனை புரிந்தது. சாதிய ஆணவக் கொலை இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை என்பதால் இந்தியிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018